Description :
தமிழர் தேசிய இயக்கத் தலைவரான பழநெடுமாறன் அவர்களின் நேர்காணலின் பெரும்பகுதி புதிய பார்வையின் இரு இதழ்களில்தொடர்ந்து வெளியானது, அதையடுத்து மேலும் அவருடன் தனி அமர்வாக எடுக்கப்பட்ட நேர்காணலும் இணைந்து இத்தொகுப்பில் முழுமையாகத்தரப்பட்டிருக்கிறது, பழநெடுமாறன் அவர்களை நேர்காணல் கண்டவரான மணா இருபத்தெட்டு ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் இருப்பவர், துக்ளக் குமுதம் தீராநதி உள்ளிட்ட பத்திரிகைகளில் முக்கியப் பங்காற்றித்தற்போது புதிய பார்வை இதழின் இணையாசிரியர்பொறுப்பில் இருக்கிறார், காட்சி ஊடகத்திலும் பங்கேற்று வரும் இவருடைய சொந்த ஊர் மதுரை அகிலா நியூஸ் என்கிற செய்தி நிறுவனத்தை நடத்திவரும் இவர் இதுவரை பனிரெண்டு புத்தகங்களை எழுதியிருக்கிறார், ஆவணப்படங்களையும்இயக்கியிருக்கிறார்,
|